Take a fresh look at your lifestyle.

குழந்தைப் பருவத்திலேயே பல ஸ்டார்களுடன் கமல்!

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் ஜெமினி, சாவித்ரியுடன் சேர்ந்து நடித்த கமலுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜியுடன், எஸ்.எஸ்.ஆர் என்று அந்தக்காலத்திய பல முன்னணி ஸ்டார்களுடனும் இணைந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவ்வை சண்முகத்தின் நாடகக்குழுவில் இணைந்து நடித்து அதன் மூலம் கிடைத்த பயிற்சி என்று கமலுக்கு இளம் வயதிலேயே அருமையான நடிப்புச் சூழல் !

தன்னுடைய முதல் படத்தில் “அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே” என்ற பாடலை கமலுக்குப் பின்னணி பாடியவரான எம்.எஸ்.ராஜேஸ்வரி பின்னாளில்- மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடித்த “நான் சிரித்தால் தீபாவளி” பாடலை ஜமுனாராணியுடன் இணைந்து பாடியிருப்பார்.

பால்ய திரை நினைவுகள்!