பேசும் படம்:
எழுத்தாளர் பாலகுமாரன், எழுத்தாளர் சுஜாதா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருப்பது நான் (பாடலாசிரியர் முத்து வடுகு).
ஷங்கர் சார் படங்களின் பாடல்களில் அங்கங்கே என்னுடைய வரிகளும் வரும். என்னுடைய பாடல் வரிகள் ஏ.ஆர்.ரகுமானுக்குப் பிடிக்கும். ஆகவே என்னிடம் சொல்லாமலே எனக்கு பல படங்களில் பாட்டு எழுத பரிந்துரை செய்திருக்கிறார்.
அவரின் பரிந்துரையின்படி ஒரு நாள் மணிரத்னம் சார் அவர்களின் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. சென்றேன். டியூன் கொடுத்தார்கள். வீட்டிற்கு வந்து பாடல் எழுதினேன்.
முழுமையாக எழுதி முடிப்பதற்குள், திடீரென்று அடுத்த நாளே ஷங்கர் சார் பட வேலையாக மும்பை செல்ல வேண்டியதாகிவிட்டது. பாடல் எழுதி முடிக்க முடியாமல் போய்விட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படத்திற்கு இசை கார்த்திக் ராஜா.
****
படம் – டும் டும் டும்
இயக்கம் – அழகப்பெருமாள்
தயாரிப்பு – மணிரத்தினம்
– நன்றி: பாடலாசிரியர் முத்து வடுகு