Take a fresh look at your lifestyle.

வெளியே டெரர் வில்லன்; உள்ளே ரொமான்ஸ் ஹீரோ!

எம்.ஜி.ஆர், சிவாஜி என முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டியெடுத்தவர் எம்.என் நம்பியார்.

பக்த ராமதாஸ் (1935) படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து இன்று வரை காலத்தால் அழிக்கமுடியாத நடிகரானார்.

ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள்.

திரையில் வில்லனாக மிரட்டிய நம்பியார் இயல்பில் மென்மை குணம் கொண்டராகவே இருந்திருக்கிறார்.

எளிமையான வாழ்வை விரும்பும் நம்பியார், தனது குடும்பத்துடன் தரையில் அமர்ந்து உணவருந்தியபோது மனைவி ருக்மணிக்கு அன்போடு உணவு ஊட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.