Take a fresh look at your lifestyle.

38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் மெகா ஆக்‌ஷன் படம் ‘கூலி’. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இதனிடையே சூப்பர் ஸ்டார், மூத்த நடிகர் சத்யராஜுடன் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்.

சத்யராஜ் ‘கூலி’ படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று வெளியான செய்திகளுக்கு மாறாக, ரஜினிகாந்தின் நண்பராக சத்யராஜ் படத்தில் நடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த அப்டேட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் கடைசியாக 38 வருடங்களுக்கு முன்னர் ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் இணைந்து நடித்தனர்.

ஏற்கெனவே பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சத்யராஜ் இணைந்து ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘மூன்று முகம்’, ‘பாயும் புலி’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மிஸ்டர் பரத்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது ‘கூலி’ படத்தில் இணைந்துள்ளார்.

படத்திற்கு இசை அனிருத், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு, கலை சதீஸ் குமார், சண்டைக்காட்சிகள் அன்பரிவ் ஆகியோர் கவனிக்கின்றனர்.

– தேஜேஷ்