தமிழில் ஷங்கர் போன்று தெலுங்கு சினிமாவில் கொண்டாடப்படுபவர் ராஜமவுலி.
அவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய இரு படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் வெளிவந்த ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படம் வசூல் குவித்ததோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது.
அடுத்ததாக ராஜமௌலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்தப் படம் புதையலைத் தேடி செல்லும் நாயகனின் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகவுள்ளது.
இந்தியாவில் விலங்குகளைப் படம் பிடிக்கக் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே இந்தப்படம் அமேசான் காடுகளில் படமாக்கப்பட உள்ளது.
பாகுபலியை இரண்டு பாகங்களாக உருவாக்கிய ராஜமவுலி, இந்தப் படத்தை 3 பாகங்களாக உருவாக்க இருக்கிறார்.
படத்தின் பட்ஜெட் 1000 கோடி ரூபாய்.
இதில் மகேஷ்பாபு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை செல்சீ இஸ்லன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் செல்சீக்கு, டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது.
அவரோடு இந்தி நடிகை தீபிகாபடுகோனும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
– பாப்பாங்குளம் பாரதி.