Take a fresh look at your lifestyle.

விஜயகாந்த் மகனுடன் இணைந்து நடிக்கத் தயார்!

நடிகர் ராகவா லாரன்ஸ்

மறைந்த தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தி நடிகர் ராகவா லாரன்சும் அவரது தாயாரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், விஜய்காந்த சார் திரையுலகிற்கு செய்யாத உதவிகளே இல்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் கேமியோ கெஸ்ட் ரோல் எல்லாம் செய்வார். அவர் பல ஹீரோக்களை வளர்த்து விட்டிருக்கிறார் என்றார்.

தொடர்ந்து பேசிய லாரன்ஸ், விஜயகாந்த் நடித்த கண்ணுபடப் போகுதையா படத்தில் மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு நான் கோரியோகிராபி செய்திருக்கிறேன். ரொம்பவும் அழகான நடனமாடினார். என்னையும் ரொம்ப என்கரேஜ் செய்தார். அப்படிப்பட்டவரின் பையனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

சண்முக பாண்டியன் நடிக்கும் படம் வெளியாகும் போது முழு வீச்சில் வரவேற்பு தர நானே இறங்கி அனைத்து விளம்பரப் பணிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன்.

அந்தப்படக்குழு விருப்பப்பட்டால் அவர்களோடு படத்தின் விளம்பர விழாக்களில் கலந்து கொள்வேன்.

திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோள். யாராவது நல்ல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள். சண்முகப் பாண்டியனோடு இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். இது அவரது குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை, அப்போது அவரது ஆத்மா சந்தோசப்படும்.

இது என் மனதிற்கு தோன்றியது. அவரது மூத்த பிரபாகரன் அரசியலில் இருக்கிறார் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் என்றார்.