பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தி கோட் லைஃப் நாவலை படமாக எடுத்துள்ளனர். இதில் நடிகை அமலா பால், ப்ரித்விராஜுடன் நடித்துள்ளார். பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதையை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நஜீப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிருத்விராஜ் இந்தப் படத்துக்காக 30 கிலோ எடையைக் குறைத்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
– தேஜேஷ்