Take a fresh look at your lifestyle.

100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த பிரேமலு!

இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு விஷ்ணுவிஜய் இசையமைத்து உள்ளார்.

நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு மார்ச் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும், இப்படத்தின் ஓடிடி உரிமையினை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இத்திரைப்படம் இதுவரை உலகளவில் 100 கோடி ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

– தேஜேஷ்