Take a fresh look at your lifestyle.

சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்!

இளம் நட்சத்திரம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களைத் தயாரித்தது ஏஜிஎஸ் நிறுவனம். ‘டியூட்’ படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டது.

இந்த மூன்று படங்களிலும் நல்ல லாபம் பார்த்தது. அதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகி இருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அர்ச்சனா கல்பாத்தி இதனை உறுதி செய்துள்ளார்.

அவர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் நிறுவனத்துக்கு பிரதீப் ரங்கநாதன் மூன்றாவது முறையாக ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது. அடுத்த ஆண்டே படத்தை வெளியிட இருக்கிறோம்” என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.

இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.