Take a fresh look at your lifestyle.

மார்ச்சில் வெளியாகும் பிஜோய் நம்பியாரின் ‘போர்’!

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘போர்’. இதில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நிகிதா தத்தா, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தை டி சீரிஸ், ரூக்ஸ் மீடியா மற்றும் கேட்வே பிக்சர்ஸ் ஆகிய படநிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு அந்தோணி, மது அலெஸ்சாண்டர் மற்றும் பிஜோய் நம்பியார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் நேரடியாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் 1ம் தேதி போர் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

– தேஜேஷ்