Take a fresh look at your lifestyle.

நான்கு மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பூவிழி வாசலிலே’!

தமிழில் வந்த ஒரு சிறந்த சஸ்பென்ஸ் திரைப்படம் ‘பூவிழி வாசலிலே’. இப்படம் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டு வந்த இயக்குநர் பாசிலால் தமிழுக்கு வந்த படம்.

இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் தான் என்றாலும், இப்படத்தின் அமைதியான காட்சிகளும் ரொம்ப டீசன்ட்டான பாடல்களும் நிறைய இருக்கும். மலையாளத்திலும் அப்படித்தான், தமிழிலும் அப்படித்தான்.

ஆனால், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது ‘பசிவடிப்ராணம்’ என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்தனர். அதில் சிரஞ்சீவி நடித்திருந்தார் கதாநாயகியாக விஜயசாந்தி, சுமலதா நடித்திருந்தனர்.

மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக நதியாவும், தமிழில் சத்யராஜ், ஜோடியாக கார்த்திகாவும் தான் நடித்திருந்தனர். ஆனால் தெலுங்கில் மட்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர்.

எந்த ஒரு திரைப்படம் என்றாலும் சரி தெலுங்கில் அதை மசாலா கலந்து தான் எடுப்பார்கள் அதற்கு இப்படம் ஒரு உதாரணம்.

அமைதியான சஸ்பென்ஸ் திரில்லர் கொண்ட இப்படத்தில் தமிழில் பெரிய டூயட் டோ கிளாமரான காட்சிகளோ கிடையாது.

ஆனால், தெலுங்கில் கிளாமரான டூயட்கள், இரண்டு கதாநாயகிகள் என அக்கட தேசமான ஆந்திராவின் டேஸ்ட்க்கு ஏற்றபடியே இப்படத்தை இயக்கியிருந்தனர்.

இப்படத்தை தெலுங்கில் மட்டும் பாசில் இயக்கவில்லை. கோதண்ட ராமி ரெட்டி என்ற இயக்குநர் இயக்கியிருந்தார்.

இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் ஆந்திர ரசிகர்களின் டேஸ்ட் இது போல தான் கவர்ச்சிகரமாகவும் மசாலாத்தனமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

– நன்றி: முகநூல் பதிவு.