Take a fresh look at your lifestyle.

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால்…!

நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

தென்னிய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என இனி அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நயன்தாரா அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், ‘என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகுச் சேர்த்துள்ளது.

வெற்றியின் போது என் தோளில் சாய்ந்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் ரசிகர்களான நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள்.

நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வாழ்த்துகிறீர்கள். உங்கள் ஆதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனால், இனிமேல் என்னை `நயன்தாரா’ என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது; ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும் அது மட்டுமே குறிக்கிறது.

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால், சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்” என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.