Take a fresh look at your lifestyle.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற `லவ்வர்’ திரைப்படம் உள்பட 3 தமிழ் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மணிகண்டன், கௌரி பிரியா உள்பட பலர் நடிப்பில் பிரபு ராம் இயக்கத்தில் உருவான `லவ்வர்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியது.

அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான `ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படம் மார்ச் ஒன்றாம் தேதி வெளியான நிலையில் இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியது.

மேலும் சபீர், மிர்னா, வரலட்சுமி, இந்திரஜித், பொற்கொடி, தீப்தி உள்பட பலர் நடித்துள்ள `பர்த் மார்க்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்தப் படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியது.

மேற்கண்ட 3 தமிழ் படங்களும் இந்த வாரம் வெளியாக இருப்பதால் ஓடிடி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஆஹா ஓடிடியில் ‘சுந்தரம் மாஸ்டர்’ என்ற தெலுங்கு படமும், அமேசான் ப்ரைமில் ‘ரேப்பிட் ஆக்சன் மிஷன்’ என்ற தெலுங்கு படமும் வெளியாகிறது. மேலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.

– தேஜேஷ்