Take a fresh look at your lifestyle.

மிர்ச்சி சிவாவின் ‘சூது கவ்வும் 2’ டீசர் வெளியீடு!

விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் வெறும் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 35 கோடி வசூல் செய்து சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, அசோக்செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவான இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மிர்ச்சி சிவா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை எஸ்ஜே அர்ஜுன் இயக்கியுள்ள நிலையில், முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் டீசரில் இறுதியில் `பொண்ணுங்களோட கற்பனையில் மட்டும் தான் நிம்மதியாக வாழ முடியும், கல்யாணம் பண்ணிக்கிட்டா நிம்மதி போய்டும்’ என்று சிவா சொல்வதுடன் முடிவடைந்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து நிலையில் டிரைலர் மற்றும் பாடல் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

– தேஜேஷ்