Take a fresh look at your lifestyle.

ரஜினி–கமல் இணையும் படத்தில் கவுரவ வேடத்தில் மம்முட்டி!

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினியும், ‘உலக நாயகன்’ கமலும் இணைந்து நடிக்கும் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் -2’ படத்தில் தனது போர்ஷனை முடித்து விட்ட ரஜினி, இப்போது ஓய்வில் இருக்கிறார். கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இது, ரஜினியின் 173-வது படம்.

சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தினை ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

‘ரஜினி173’ படத்தினை முடித்துவிட்டுத்தான், கமலுடன் ரஜினி இணைந்து நடிக்கும் படம் தொடங்குகிறது. இந்த ஆண்டு கடைசி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஷுட்டிங் ஆரம்பமாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.

தற்காலிமாக இந்தப் படத்துக்கு ‘KH +RK’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார். ‘தாதா’ கமலின் நண்பராக அவர் நடிக்கிறார். மம்முட்டிக்கும் ‘கேங்ஸ்டர்’ வேடம்தான்.

மம்முட்டியை இந்த கேரக்டருக்கு பரிந்துரை செய்தவர் சாட்சாத், கமல்ஹாசன்தான். கமலுடன் மம்முட்டி நடிக்கும் முதல் படம், இது என்பது குறிப்பிடத்தக்கது.

– பாப்பாங்குளம் பாரதி