Take a fresh look at your lifestyle.

மக்கள் திலகம் எழுதிய கடிதம்!

1958-ல் கச்சா பிலிம் இறக்குமதியைக் குறைக்க அரசாங்கம் முடிவெடுத்தபோது அதற்கெதிராக நிமாய் கோஷ் ஊர்வலம் நடத்தத் திரைத்துறையினருக்கு அழைப்பு விடுத்தார். அவருடைய அழைப்பினையேற்று எம்.ஜி.ஆர், நிமாய் கோசுக்கு எழுதிய கடிதம்.

 

 

பெறுநர்

திரு. நிமாய் கோஷ் அவர்கள்,

தலைவர், தென்னிந்திய சினி டெக்னீஷியன் ஸ்கில்ட்,

6, நார்த் கிரசென்ட் ரோடு,

சென்னை 17.

அன்புடையீர்… வணக்கம்.

தங்களின் 26.09.1958 ம் தேதியிட்டு எழுதிய கடிதம் கிடைத்தது.

தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் நடிகர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதாக, நடிகர் சங்கச் செயற்குழுவால் செய்யப்பட தீர்மானத்தின் பிரதி தங்களுக்குக் கிடைத்திருக்குமென்று நம்புகிறேன்.

விழா ஊர்வலத்தில் நடிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களா, இல்லையா? என்பதைத் தெரிவிக்க இயலவில்லை. ஆயினும் கூட்டத்தில் நடிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

வணக்கம்

இப்படிக்கு,

எம்.ஜி. ராமச்சந்திரன்.

தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம்.

******

 ‘நிமாய் கோஷ் – புது நெறி காட்டிய திரைக்கலைஞர்’ என்ற தலைப்பில் சுனிபா பாசு எழுதிய ஆங்கில நூலின் மொழியாக்கத்தில் இருந்து. தமிழில் மொழிபெயர்த்தவர் அம்ஷன்குமார்.

நன்றி:  அம்ஷன்குமார்.