Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆருக்கும், நம்பியாருக்கும் இடையே இருந்த நட்பு!

1947–ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய இருவருக்குமான நட்பு, இறுதி வரை பிரிக்க முடியாத உறவாகவே இருந்தது.

எம்.ஜி.ஆருக்குப் படங்களில் பிரதான வில்லன் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்திலும் என்.என்.நம்பியார்தான் வில்லன் கதாப்பாத்திரம் ஏற்றிருப்பார்.

திரையில் இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வார்கள். கத்தியுடன் சண்டையிடுவார்கள், வாள் சண்டை பொறி பறக்கும். ஆனால் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளனர்.

எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா…’ என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பிருந்தது. அந்த உரிமையை நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். வழங்கியிருந்தார்.

இருவரின் நட்பை பெருமைப் படுத்தும் விதமாக ‘தாய்’ நிறுவனம் தயாரித்துள்ள எம்.என்.நம்பியாரைப் பற்றிய ஆவணப்படத்தின் இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=WfSauW-sglQ&list=UULFMCqIyDwrKXkdyIin72jUYQ&index=16&ab_channel=THAAIICOM