‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்குப் படம் இல்லை என பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்தப் படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ. 26 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளில் ரூ.11 கோடி, மூன்றாவது நாளில் ரூ.14 கோடி வசூல் ஆனது.
நான்காவது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, என்பதால் அதிக அளவில், கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டம் இல்லை. 14 கோடி ரூபாய் மட்டுமே வசூலானது.
‘விடாமுயற்சி’, இந்திய அளவில் முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.65 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில், முதல் 4 நாட்களில் ரூ.38 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக உலக அளவில் விடாமுயற்சி’ ரூ.100 கோடியை ஈட்டியுள்ளதாக திரை உலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹாலிவுட்டின் ‘பிரேக் டவுன்’ படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட, இந்தப் படத்துக்கு அஜித், ரூ.120 கோடி சம்பளம் பெற்றதாக தகவல்.
இன்னும் நான்கு நாட்களில் ஐந்தாறு படங்கள் வெளிவர உள்ளன.
இதனால், விடாமுயற்சி பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.