Take a fresh look at your lifestyle.

ரஜினி படம் பொங்கலுக்கு வருமா?

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்துள்ள படம் ‘லால் சலாம்’.

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள ‘லால் சலாம்’ படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருவண்ணாமலை, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஷுட்டிங் நடந்தது. படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருந்தது.

பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது.

லைகா நிறுவனத்தின் ‘மிஷன் சாப்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், அதே நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

அடுத்த மாதம் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.