Take a fresh look at your lifestyle.

’குற்றம் கடிதல் 2’ முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “குற்றம் கடிதல் 2” படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்த நாட்களைவிட மூன்று நாட்கள் முன்பாகவே, கொடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்தப் படம் ஒரு த்ரில்லர் டிராமா வகை படம். தென்காசி, சிறுமலை மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளன.

இப்படத்தில் JSK சதீஷ்குமார், பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பவல், பட்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன், ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.