Take a fresh look at your lifestyle.

அஞ்சும் நிலை மாறட்டும்!

கர்நாடக இசை பற்றி தெரியாதவர்கள்கூட அதை ரசிக்கும் வகையில் இனிமையாக, எளிமையாக வயலின் இசையை வழங்கியவரும் ‘வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்த போற்றுதலுக்குரியவருமான குன்னக்குடி வைத்தியநாதன் 1969-ல் ‘வா ராஜா வா’ என்ற திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார்.

‘தெய்வம்’, ‘அகத்தியர்’, ‘திருவருள்’ உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘திருமலை தென்குமரி’ படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசின் விருதைப் பெற்றார்.

இசைப் பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள குன்னக்குடி வைத்தியநாதனின் பிறந்தநாள் நினைவாக அவரது இசையில் ‘தெய்வம்’ திரைப்படத்தில் இடம்பெற்று மெகா ஹிட் அடித்த மருதமலை பாடலின் வரிகள்:

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
மருதமலை மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

(மருதமலை) 

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

(மருதமலை) 

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா 

(மருதமலை) 

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் 

(மருதமலை) 

சக்தித் திருமகன் முத்துக்குமரனை
மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட
வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா 

(மருதமலை) 

– 1972-ம் ஆண்டு வெளிவந்த ‘தெய்வம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இசை – குன்னக்குடி வைத்தியநாதன். குரல் – மதுரை சோமு.