Take a fresh look at your lifestyle.

பின்னணி இசை அமைக்கும் கார்த்திக் ராஜா!

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்த இயக்குநர் வீர அன்பரசு, இரண்டாவது கதாநாயகன் ஆகாஷ் முத்துவுடன் சென்று, பின்னணி இசை அமைக்க கேட்டுக் கொண்டார்.

கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைக்க உடனே ஒப்புக் கொண்டார்.

நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’.

கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார்.

இவர்களுடன் ஆகாஷ் முத்து, ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு.

ஒளிப்பதிவு வில்லியம்ஸ், நடனம் கென்னடி, டயானா, சண்டைப் பயிற்சி கோல்டன் என்.கோபால், செட் அசிஸ்டன்ட் நாசரேத் பழனி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனுராதா அன்பரசு.

#ஏஏஏ_பிக்சர்ஸ் #AAA_Pictures #அனுராதா_அன்பரசு #Anuradha_Anparasu #கமாண்டோவின்_லவ்_ஸ்டோரி #Commandovin_Love_Story #கார்த்திக்_ராஜா #Karthik_Raja #இயக்குநர்_வீர_அன்பரசு #Director_Veera_Anparasu #ஆகாஷ்_முத்து #Akash_Muthu #நடிகை_ஏஞ்சல் #Actress_Angel #ரோபோ_சங்கர்#Robo_Shankar #பிருத்திவிராஜ்_பப்லு #Prithviraj_Pablu #இயக்குனர்_அரவிந்தராஜ் #Director_Arvindaraj