Take a fresh look at your lifestyle.

ரசிகர்களை ஈர்த்த ‘ரெட்ரோ’ பட “கண்ணாடிப் பூவே” பாடல்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ‘ரெட்ரோ’ படத்திலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களை மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை, கவிஞர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துப் பாடியுள்ளார். பாடல் வெளியானவுடனே, ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது இப்பாடல்.

சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களோடு, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார்.

ஆக்சன் கலந்த ரொமாண்டிக் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படம், உலகமெங்கும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.