Take a fresh look at your lifestyle.

ராஜா இசையில் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’!

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தயாரான படங்களுக்கு எப்பவும் மக்களிடத்தில் மதிப்பு அதிகம் இருக்கும்.

அன்று தொடங்கி இன்று, லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் வரை மாபெரும் ஹிட் படங்களாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வகை படமாக ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ உருவாகி வருகிறது.

படத்தைப் பற்றித் பேசிய தயாரிப்பாளர், “கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைக்கிறார்.

அவரின் பிறந்த நாளான இன்றைய மகிழ்வான தருணத்தில், எங்களது திரைப்படத் தலைப்பின் அறிவிப்பு முன்னோட்டக் காட்சியை (வீடியோ) வெளியடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தந்தை – மகன் உறவு பற்றிய நெகிழ்ச்சி மிகுந்த இக்கதையின் நாயகனாக நாசர் நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவும் நாசரும் இணையும் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை அனுபவத்தை மறுபடியும் அளிக்கும் என்று நம்புகிறோம்..” என்று என்று தயாரிப்பாளர் தெரிவித்தார்கள்.

நாசர் நாயகனாக நடித்து, இயக்கி, இளையராஜா இசை அமைத்த படம் ‘அவதாரம்’. “தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல..” இந்தப் பாடல் ஒலிக்காத நாளில்லை.., மேடையில்லை..!

அப்படிபட்ட லெஜண்ட் இருவரும் சேரும் படம் என்பதால் ரசிகர்களிடம் தனி கவனம் இப்பொழுதே ஆரம்பமாகியது.

தந்தை – மகன் உறவு கதையான இபடத்தில் தந்தையாக் நாசர் நடிக்க மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தனபால் பத்மநாபன் எழுதி இயக்குகிறார். மற்ற அதிகாரபூர்வமான செய்திகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

#நாசர் #Nasser #கடவுளின்_வீட்டிற்குச்_செல்லும்_வழி #Kadavulin_veetirukku_sellum_vazhii #இசைஞானி_இளையராஜா #Ilaiyaraaja #தனபால்_பத்மநாபன் #Dhanapal_padmanabhan