1978ம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் வடிவுக்கரசி.
பெரியப்பா ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘வடிவுக்கு வளைகாப்பு’ பட சமயத்தில் பிறந்ததால், வடிவுக்கரசி என்று பெயர் வைத்தார் பெரியப்பா.
இன்று வரை தனக்கனெ ஒரு பாணி என அமைத்துக் கொண்டு, அரசியாகவே தனக்கான உலகில் வாழ்ந்து வருகிறார்.
ஒருகாலத்தில் ஓஹோ என்றிருந்த குடும்பம், நொடித்துப் போனதால் 75 ரூபாய் சம்பளத்தில் இருந்து தொடங்கிய வாழ்க்கை வடிவுக்கரசியுடையது.
44 வருட திரையுலக வாழ்க்கையில், இன்னமும் வடிவென ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை வடிவுக்கரசியின் கேரக்டர் கதாபாத்திரமாகவே மாறிவிடும்.
குறிப்பாக அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியை மிரட்டும் அந்த பாட்டியை யாராலும் மறக்க முடியாது. பார்க்கும் ரசிகர்களுக்கு கூட பயம் வந்துவிடும். அந்த அளவிற்கு அவருடைய பார்வையில் கோபமும் வெருப்பும் இருக்கும்.
அப்படி நடிப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டாலும் அது எனக்குப் பிடித்தது என்று கூறி இருக்கிறார்.
இன்று வரை எனக்கு சோறு போடுவது ‘முதல் மரியாதை’ பொன்னாத்தாதான் என்கிறார் பெருமையாக.
கணவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய கணவர் இவரை விட்டுவிட்டு விலகிச் சென்று விட்டாராம். அதற்கு பிறகு இவருக்கு இருந்த ஒரே மகளையும் அவருடைய அம்மா தான் வளர்த்து வந்திருக்கிறார்.
தன்னுடைய குழந்தையை வளர்க்காத நான் இப்போது நடித்துக் கொண்டிருந்தாலும் என்னுடைய குழந்தையின் குழந்தையான என்னுடைய பேத்தியை நான் தான் பார்த்து பார்த்து வளர்த்து வருகிறேன் என்கிறார் வடிவுக்கரசி.
வாழும் வாழ்க்கையை நல்ல படியாக வாழுங்கள், விட்டுக் கொடுத்து வாழுங்கள். அது தான் வாழ்க்கை என்று தனது அனுபவத்தைச் சொல்கிறார் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத வெள்ளந்தியான மனுஷி வடிவுக்கரசி.