கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான `இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் `இந்தியன் 3’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
`இந்தியன் 2’ படத்தின் தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படம் இன்னும் ஒரு சில வாரங்களில் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று கூறப்பட்டது.
தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் `இந்தியன் 2’ திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படம் என்பதால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்னர் மே 24 ஆம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
– தேஜேஷ்
#ஷங்கர் #Shankar #கமல்ஹாசன் #Kamalhaasan #இந்தியன் 2 #Indian 2 #ரிலீஸ் #Release #தேர்தல் #Election #காஜல்_ அகர்வால் #Kajal _agarwal #சித்தார்த் Siddharth #ரகுல் _ப்ரீத் சிங் #Rahul _preet singh