Take a fresh look at your lifestyle.

ரசனையான காதல் காட்சிகளைத் தந்த ஜி.வி.எம்.!

காதல் கதைக்களத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் என்றுமே அழியா இடத்தை, சில திரைப்படங்கள் மட்டுமே பிடித்திருக்கும்.

அப்படி நம் மனதில் இருந்து என்றுமே பிரியாமல் இருக்கும் காதல் கதைகளை திரையில் காட்டியவர் தான் இயக்குனர் கவுதம் மேனன்.

இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் மக்கள் மனதை விட்டு என்றுமே நீங்காத இடத்தை பிடித்திருக்கும் சிறந்த படங்கள் பற்றி இந்த இந்த பதிவில் பார்க்கலாம்.

1. மின்னலே

முதல் படமே மாபெரும் வெற்றியை கவுதம் மேனனுக்கு சொந்தமாக்கியது. மின்னலே படத்தின் மூலம் கவுதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் என இரு மாபெரும் கலைஞர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தனர்.

கதைக்களம், திரைக்கதை, நடிகர், நடிகைகளின் நடிப்பு இப்படத்தின் வெற்றியைத் தீர்மானித்ததோ, ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக விளங்கியது.

2. விண்ணைத்தாண்டி வருவாயா

முதல் முறையாக சிம்பு, திரிஷா, கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

தமிழ் சினிமாவில் டாப் 10 காதல் படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக இப்படமும் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

3. வாரணம் ஆயிரம்

காதலன் – காதலிக்கு இடையே மலரும் காதலை திரையில் காட்டி வந்த கவுதம் மேனன், முதல் முறையாக தந்தை – மகன் இடையில் இருக்கும் காதலை அழகாக இயக்கியிருந்த திரைப்படம் தான் வாரணம் ஆயிரம்.

ஹாரிஸ் இசையில் உருவான இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் இன்று வரம் நம் நினைவில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் அசத்தியிருந்த சூர்யாவுடன் இணைந்து சமீரா ரெட்டி, சிம்ரன் மற்றும் ரம்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

4. காக்க காக்க

சூர்யா – கவுதம் மேனன் முதல் முறையாக இணைந்த திரைப்படம் தான் காக்க காக்க. ஜோதிகா மூலம் இப்படத்தின் வாய்ப்பை சூர்யா பெற்றார்.

விஜய், விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க மறுத்த இந்த கதையில், சூர்யா நடித்து மாபெரும் ஹிட்டானது.

இன்று வரை சூர்யாவின் திரைவாழ்க்கையில் சிறந்த டாப் 10 திரைப்படங்களில் காக்க காக்க படமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5. வேட்டையாடு விளையாடு

கவுதம் மேனன் யாரை பார்த்து சினிமாவிற்கு வந்தாரோ, அவரையே இயக்க கூடிய வாய்ப்பு வேட்டையாடு விளையாடு படத்தில் கிடைத்தது.

ஆம், உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் இசையில் 2006ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது வேட்டையாடு விளையாடு.

இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலினி முகர்ஜீ, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

6. என்னை அறிந்தால்

அஜித் – கவுதம் மேனன் கூட்டணி எப்போது இணையும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வந்த அமைந்த திரைப்படம் தான் என்னை அறிந்தால்.

மிரட்டலான கதைக்களத்தில் தந்தைக்கும், மகளுக்கும் இடையே உள்ள பாசத்தை திரையில் அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் கவுதம் மேனன்.

அதே போல் இப்படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் மாபெரும் கம் பேக் கிடைத்தது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அனுஷ்கா, அனிகா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

– கார்த்திக்

  • நன்றி: சினி உலகம்