Take a fresh look at your lifestyle.

ரஜினி படத்தில் துஷாராவின் துள்ளலாட்டம்!

‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து ‘லால் சலாம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்த ரஜினிகாந்த், இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியார், ரித்திகா உள்ளிட்டோரும் உள்ளனர்.

துஷாரா விஜயனுக்கு இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்த துஷாரா விஜயன், இதனைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‘காவலா’ பாடல் மிகவும் பிரசித்தம். பட புரமோஷனுக்கு பெரிதும் துணையாக இருந்தது, அந்தப் பாடல்.

அது போன்ற ஒரு பாடல் ‘வேட்டையன்’ படத்திலும் இடம் பெற உள்ளது. இந்தக் குத்தாட்டப் பாடலுக்கு ஆடப்போகிறவர், துஷாரா விஜயன்.

‘காவலா’ பாடலுக்கு இசையமைத்த அனிருத் இந்தப் பாடலுக்கும் இசையமைக்க உள்ளார்.

முதல் படத்தில் சேலை உடுத்தி அடக்கம் ஒடுக்கமாக குடும்ப பெண்ணாக நடித்தாலும், துஷாரா விஜயன், மேற்கத்திய நடிகைகளின் பாணியைப் பின்பற்றுபவர்.

அண்மையில் தீவு ஒன்றில் புத்தாண்டு கொண்டாடிய அவர், அங்குள்ள கடற்கரையில் நீச்சல் உடையில் ‘ஹாயாக’ நடந்து சென்று காற்று வாங்கினார்.

அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார் துஷாரா விஜயன்.

இந்தப் போட்டோவை பார்த்து, ‘வேட்டையன்’ படத்தில் குத்தாட்ட பாடலை புகுத்தும் எண்ணம் டைரக்டர் ஞானவேலுவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

-பாப்பாங்குளம் பாரதி.