Take a fresh look at your lifestyle.

நடிப்பே வேண்டாம்: சரணை விரட்டிய எம்.எஸ்.வி!

இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவியாளராக இருந்தவர் சரண். இவர் அஜித் நடித்த ‘காதல் மன்னன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அமர்க்களம், ஜே.ஜே, அட்டகாசம், ஜெமினி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட  வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

‘காதல் மன்னன்’ படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்திருந்தார்.

ஸ்கிரிட் எழுதும்போது, அந்தப் படத்தில் மெஸ் விஸ்வநாதன் கேரக்டரே இல்லை. ஒருமுறை விவேக், சரணுக்கு போன் செய்து, எம்.எஸ்.வி. இன்டர்வியூ ஒன்றைப் பார்க்குமாறு கூறியுள்ளார். அதைப் பார்த்த சரண் தனது படத்தில் எம்.எஸ்.வியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

படப்பணிகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. நடுவில் எப்படி ஒரு கேரக்டரை சேர்ப்பது என்று யோசித்தார் சரண். ஹீரோ ஒரு மேன்ஷனில் தங்கியிருப்பார். அந்த மேன்ஷனில் மெஸ் வைத்திருப்பவர் என்ற கேரக்டரை எம்.எஸ்.விக்காக உருவாக்கினார் இயக்குநர்.

எம்.எஸ்.வி. முதலில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் 3 மாதங்கள் நடையாய்  நடந்து அவரை ஓகே. சொல்ல வைத்துள்ளார் சரண்.

இந்தப் படத்திற்காக 10 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்ட எம்.எஸ்.வி, அதில் ரூ.5 லட்சம் தனக்கும், ரூ.5 லட்சம் ராமமூர்த்திக்கும் என்று கூறியுள்ளார். அவர் கேட்டபடியே சம்பளம் அளிக்கப்பட்டது. மெஸ் விஸ்வநாதன் கேரக்டரில் அற்புதமாக நடித்துக் கொடுத்தார் மெல்லிசை  மன்னர்.

– பாப்பாங்குளம் பாரதி.