Take a fresh look at your lifestyle.

ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரிக்கும் அட்லீ!

ஷங்கரிடம் சினிமா பயின்ற அட்லீ, தொடர்ச்சியாக ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என நான்கு வெற்றிப்படங்களைத் தமிழில் தந்தார்.

ஷாருக்கான் ஹீரோவாக நடித்த ‘ஜவான்’ திரைப்படம் மூலம் இந்தியிலும் தடம் பதித்தார்.

1,110 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து ‘ஜவான்’ சாதனைப் படைத்தது.

விஜய் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் வகையிலான ஸ்கிரிப்டை இப்போது ரெடி செய்து கொண்டிருக்கும் அட்லீ, ஒரே நேரத்தில் 4 படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

எந்த படத்தையும் அவர் இயக்கவில்லை. அவர் தயாரிக்கும் படங்களில் ஒன்று இந்திப்படம்.

இந்தப் படம், அவரது தெறி படத்தின் ரீமேக் வருண் தேவன், கீர்த்தி சுரேஷ், வாமிகா சுபி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தை காளீஸ் இயக்குகிறார்.

இது தவிர, இரண்டு தமிழ்ப் படங்களையும் ஒரு தெலுங்குப் படத்தையும் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படங்களின் இயக்குநர்களை விரைவில் அறிவிக்கப்போவதாக அட்லீ தெரிவித்தார்.

நான்கு படங்களும் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக உள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.