தமிழைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கன்னட மொழியிலும் திரைப்படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘டோனி என்டர்டெயின்மென்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர்.
இந்நிறுவனம் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரேஜ் என்ற திரைப்படத்தை தயாரித்தனர்.
இதனைத் தொடர்ந்து டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கன்னட மொழியிலும் திரைப்படம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
– தேஜேஷ்