Take a fresh look at your lifestyle.

அஜித் முதல் அல்லு அர்ஜூன் வரை: DSP-ன் பயணம்!

128

ரசிகர்களால் டி.எஸ்.பி. என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத். அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே இவர் ஈர்த்து வருகிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே சமயத்தில் ஐந்து மொழிகளில் ஹிட் அடித்தது.

இந்நிலையில், முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களான அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’, சூர்யா நடிக்கும் ‘கங்குவா’, விஷால் நடிக்கும் ‘ரத்னம்’,  மற்றும் ‘புஷ்பா 2’, தனுஷ் நடிப்பில் ‘குபேரா’ என்று தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது இசையமைத்து பெரும் வரவேற்பை பெற்றார்.

இந்த படங்கள் தவிர பவன் கல்யாண் நடிப்பில் ‘ஹரிஷ் சங்கர்’ இயக்கத்தில் ‘உஸ்தாத் பகத்சிங்’, நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘தாண்டேல்’, புதுமுகங்கள் நடிக்கும் ‘ஜூனியர்’ உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களுக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் தேவி பிரசாத்துக்கு திரைப்பிரபலங்கள் உட்பட அவரது ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.