ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ நாவலை ‘விடுதலை’ எனும் பெயரில் திரைப்படமாக எடுத்தார் இயக்குநர் வெற்றிமாறன்.
சூரி கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப்படம் சக்கைப் போடு போட்டது. விடுதலை இரண்டாம் பாகம் வெளியாகும் என முதல் பாகம் ரிலீஸ் ஆகும் முன்பே அறிவிக்கப்பட்டது.
முதல் பாகம் எடுத்தபோதே, இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளையும் வெற்றிமாறன் எடுத்திருந்தார். ஆனால், படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி – மஞ்சு வாரியார் சம்மந்தப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். மூடுபனி பின்னணியில் நடப்பது போன்று கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் நிஜமான மூடுபனி உருவாக 100 நாட்கள் காத்திருந்தார் இயக்குநர். மூடுபனி வரவில்லை. இதனால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மூடுபனி காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளார்.
ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்புடன் கிளைமாக்ஸ் காட்சிப் படமாக்கப்பட உள்ளது.
‘விரைவிலேயே விடுதலை-2 திரைக்கு வரும்’ என அறிவித்துள்ளார் வெற்றிமாறன். அநேகமாக வரும் மார்ச் மாதத்தில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.
இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.