Take a fresh look at your lifestyle.

அன்னபூரணி படத்திற்கான தடையும் பின்னணியும்!

நடிகை நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா டைரக்ட் செய்திருந்தார்.

ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

அண்மையில் இந்தப் படம் நெட்பிளிக்ஸ் இணைய தளத்திலும் வெளியானது.

அர்ச்சகர் மகளாக நடித்திருந்த நயன்தாரா, ‘தொழுகை’ செய்வது போலவும், அசைவ உணவுகளை சமைப்பது போன்றும், அசைவம் சாப்பிடுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று சிவசேனா பிரமுகர் ஒருவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹிந்து சேவா பரிஷத் அமைப்பு, ஜபல்பூர் காவல் நிலையத்தில் நயன்தாரா மீது புகார் அளித்தது.

அன்னபூரணி படம் இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜபல்பூர் போலீசார் நயன்தாரா மற்றும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அன்னப்பூரணி படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்தப் படத்தை தடை செய்யவேண்டும் என்று பல தரப்பினரும் பதிவிட்டு வந்தனர்.

கடும் எதிர்ப்பு காரணமாக இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.