பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகவில்லை.
தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ ஆகிய இரண்டு சினிமாக்களும் நேற்று ஒரே நாளில் ரிலீஸ் ஆயின.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், சரத் கேல்கார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரவிகுமார் டைரக்ட் செய்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘கேப்டன் மில்லர்’ தமிழ்நாட்டில் 460 திரைகளில் வெளியானது. உலகம் முழுவதுமாக 1500 தியேட்டர்கள்.
அயலானும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இதே அளவிலான திரை அரங்குகளில் வெளியானாலும், உலக அளவில் கொஞ்சம் குறைவான தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆகி உள்ளது.
இரு படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் கேப்டன் மில்லர் 17 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
அயலான் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலில் சிவகார்த்திகேயனை, தனுஷ் முந்தி நிற்கிறார்.
-பாப்பாங்குளம் பாரதி.