Take a fresh look at your lifestyle.

கதாநாயகனாகும் ‘பிக்பாஸ்’ அமீர்!

இயக்குநர் P.G. முத்தையாவின் உதவியாளரும் குறும்பட இயக்குநருமான P.T. தினேஷ் இயக்கத்தில் SDICE FILM MAKERS தயாரிப்பில் உருவாகும் PRODUCTION NO : 1 படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது.

இன்றும் சில மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்வியலை மையக் கருவாகக் கொண்டு கதாநாயகனின் கதாபத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை, மற்றும் படப்பிடிப்பு துவக்க விழா அண்மையில் விமர்சியாக நடைபெற்றது.

இந்தப் படத்தில், ஜித்தன் ரமேஷ், இயக்குநர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.