Take a fresh look at your lifestyle.

ரஜினி படத்தில் பாலகிருஷ்ணா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், இப்போது ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார்.

இதில், முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறு சில முக்கியக் கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

முதல் பாகத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகிபாபு ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இந்தப் படத்தில் நடிக்கும் தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார்.

இது தொடர்பான போட்டோ கசிந்துள்ளது. அந்தப் போட்டோவில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.

அதில், பாலகிருஷ்ணா போலீஸ் ‘கெட்டப்’பில் இருக்கிறார்.

ரஜினி – சிவராஜ்குமார் காட்சிகள் முதல் பாகத்தில் பேசப்பட்டது போல், இதில் ரஜினி – பாலகிருஷ்ணா காட்சிகள் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.