Take a fresh look at your lifestyle.

அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தாவா? த்ரிஷாவா?

அட்லி இயக்க இருக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் அனிருத் இணையும் படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க போகிறார் என்றும், முதல் முறையாக அல்லு அர்ஜுனுடன் அவர் இணைந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியானது.

இதனிடையே தற்போது வந்த புதிய தகவல்படி இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சமந்தா ஏற்கனவே அட்லி இயக்கத்தில் உருவான `தெறி’ மற்றும் `மெர்சல்’ படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அட்லியின் ஆஸ்தான நடிகையான சமந்தா இந்தப் படத்தில் இணைவாரா? இவர் த்ரிஷாவுக்கு பதில் நடிக்க போகிறாரா? அல்லது த்ரிஷா மற்றும் சமந்தா இருவருமே நடிக்க போகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

– தேஜேஷ்