தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ பெரும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக உருவான ‘புஷ்பா-2′ படமும் வசூலில் புதிய சாதனை படைத்தது.
‘புஷ்பா’ படத்தின் இரண்டு பாகங்களும் வசூல் குவித்ததால், அல்லு அர்ஜுன், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
‘புஷ்பா-2′ வுக்கு பிறகு அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கும் ‘பான் இந்தியா’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இது, அட்லீ இயக்கும் 6 – வது படமாகும்.
அட்லீ – அல்லு கூட்டணியின் இந்தப் படத்துக்கு தற்காலிமாக ‘A-6’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் விஜய் மூன்று வேடங்களில் தோன்றினார்.
அவர் இயக்கிய ‘பிகில்’ படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவரது புதிய படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாகிறது. ஒட்டுமொத்தமாக இந்தப் படத்துக்கு 3 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் அல்லு.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை முடித்துவிட்டு திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார்.
– பாப்பாங்குளம் பாரதி