நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை ஷாலினி ஆகிய இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணமாகி 24 வருடங்கள் ஆனதை அடுத்து அந்தக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினர்.
சென்னையில் உள்ள லீலா பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் அஜித் மற்றும் ஷாலினி திருமண நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
மேலும் அங்கிருந்த ரசிகர்கள் வாழ்த்து கூறிய போது அவர்களுடன் இணைந்து அஜித் மற்றும் ஷாலினி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அஜித் கோட் சூட்டிலும், ஷாலினி சுடிதாரிலும் இருக்கும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்
இதனிடையே மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் வர இருப்பதை அடுத்து இன்னொரு கொண்டாட்டம் இருக்கிறது என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்தப் படம் முடிந்தவுடன் அவர் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூனில் தொடங்கவுள்ளது.
– தேஜேஷ்