Take a fresh look at your lifestyle.

பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்!

சென்னையில் ரசிகர்களை சந்திக்காத ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித், அஜர்பைஜானில் தினமும் ரசிகர்களை சந்தித்து வருவது திரை உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து அஜித், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அஜித்தின் 62 வது படம்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘விடாமுயற்சி’ என பெயரிப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி திரிஷா.

பிரியா பவானி சங்கர், ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

அஜித், அஜர்பைஜானில் இருப்பதை அறிந்து அவரை ஏராளமான ரசிகர்கள் தினமும் சந்தித்து வருகிறார்கள் அஜர்பைஜானுக்கு அருகில் இருக்கும் நாடுகளில் இருந்தும் திரளான ரசிகர்கள் அஜித்தை பார்த்து புகைப்படம் எடுத்த வண்ணம் உள்ளனர்.

நடிகை பாவனாவும் அஜித்தை அங்கு சந்தித்துள்ளார். இருவரும் ‘அசல்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

நடிப்புக்கு தற்காலிக ஓய்வு அளித்திருந்த பாவனா, இப்போது ‘பிங்க் நோட்’ எனும் கன்னடப் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் ஷுட்டிங், அஜர்பைஜானில், விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்கும் பகுதியிலேயே நடக்கிறது.

இதனை அறிந்த பாவனா, அஜித்தை அவரது படப்பிடிப்பு தளத்தில் சென்று சந்தித்து பேசினார். ஏற்கனவே, அஜித்துக்கு தகவல் அனுப்பி இருந்தார் பாவனா.

பாவனா வந்ததும், அஜித், எழுந்து நின்று அவரை வரவேற்றார்.

அப்போது அவரிடம் பாவனா, “நீங்க லேட்டாக வந்ததால் நானும் கொஞ்சம் லேட்டாக வந்தேன்” சொல்ல, அஜித் ‘சாரி’ என பாவனாவிடம் எல்லோர் முன்பும் மன்னிப்பு கேட்கிறார்.

இதனை பாவனா ரசிப்பதோடு அஜித்துடன் 30 நிமிடங்கள் ஜாலியாக அரட்டை அடித்துள்ளார். அஜித், பாவனா சந்தித்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையிலும் ரசிகர்களை சந்திப்பீங்களா ஜி?

-பாப்பாங்குளம் பாரதி.