தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் த்ரிஷா. இவருக்கு இடையில் சில படங்கள் நன்றாக போகாததால் வாய்ப்புகள் குறைந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றி மார்க் கெட்டைத் தூக்கி நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து ‘ரோடு’, விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘லியோ’ படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தன.
தற்போது கமல்ஹாசனுடன் ‘தக் லைப்’ அஜித்துக்கு மீண்டும் ஜோடியாக ‘விடாமுயற்சி’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஷ்வம்பரா’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ராம்’ மற்றும் ‘ஐடன்டிட்டி’ ஆகிய 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா.
இதில் ‘விடாமுயற்சி, ‘ஐடன்டிட்டி’, ‘ராம்’ படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. இந்நிலையில் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் திரிஷா நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் அஜித்துக்கு வில்லியாகவும் நடிக்கவுள்ளார் என எதிர்பார்ப்பு கிளம்பின. ஏற்கனவே அஜித்துடன் ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் 6-வது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார் திரிஷா.
