Take a fresh look at your lifestyle.

‘கலகலப்பு – 3’ல் நடிகை வாணி போஜன்!

‘அரண்மனை 4’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ‘கலகலப்பு -3’ படத்தைத் தயாரிக்க இயக்குநர் சுந்தர் சி தயாராகி வருகிறார். கோலிவுட் திரையுலகில் சமீபகாலமாக நிதி நெருக்கடிகள் இருந்தாலும், ‘அரண்மனை -4’ 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் ‘கலகலப்பு – 3’ படத்தில் விமல் மற்றும் சிவாவை மீண்டும் இணைக்கவுள்ளார் சுந்தர் சி. கதாநாயகிகளில் ஒருவராக நடிகை வாணி போஜன் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் தற்போது இறுதி செய்து வருகின்றனர். இந்த அப்டேட்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

‘கலகலப்பு’ படத்தின் முதல் பாகம் 2012-ல் வெளிவந்தது. இதில் விமல், சிவா, அஞ்சலி மற்றும் ஓவியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். அது பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்த வெற்றி கலகலப்பு-2ல் ஜெய், ஜீவா, ஷிவா, நிக்கி கல்ராணி மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோரின் தொடர்ச்சிக்கு வழிவகுத்தது. இது ஓரளவு லாபம் ஈட்டியது. இதனிடையே தற்போது, வரவிருக்கும் மூன்றாம் பாகம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்

#இயக்குநர்_சுந்தர்_சி #Director_Sundar_C #அரண்மனை_4 #Aranmanai_4 #கலகலப்பு_3 #Kalakalappu_3 #நடிகர்_விமல் #Actor_Vimal #நடிகர்_சிவா #Actor_Siva #நடிகை_வாணி_போஜன் #Actress_Vani_Bhojan