Take a fresh look at your lifestyle.

சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா!

தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு முன்பு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் தோல்வி அடைந்து அவரது மார்க்கெட் சரிந்தது.

ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த குந்தவை கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் அவருக்கு விஜய் ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதால் த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் ஏறுமுகமாகி உள்ளது. சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார்.

லியோ படத்தில் ரூ.4 கோடி வாங்கிய அவர், தற்போது ரூ.10 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. த்ரிஷா தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து கமல்ஹாசனின் 234-வது படத்திலும் நடிக்க இருக்கிறார்.