Take a fresh look at your lifestyle.

புதிய தோற்றத்தில் ப்ரியா ஆனந்த்!

ஐ.அகமத் இயக்கத்தில் 2009 – ல் வெளிவந்த வாமனன் படத்தில் நடிகர் ஜெய்-க்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை ப்ரியா ஆனந்த்.

அதைத் தொடர்ந்து நூற்றெண்பது, இங்கிலீஸ் – விங்கிலீஸ், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, அரிமா நம்பி, இரும்புக் குதிரை, வை ராஜா வை, த்ரிஷா இல்லனா நயன்தாரா, கூட்டத்தில் ஒருவன், எல்.கே.ஜி, லியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ப்ரியா ஆனந்த், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் நடித்த கான் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

இந்த நிலையில், நடிகை ப்ரியா ஆனந்த் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்தப் படங்கள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.