Take a fresh look at your lifestyle.

சர்தார்-2 படப்பிடிப்புக்கு தயாராகும் கார்த்தி!

நடிகர் கார்த்தி தற்போது நடித்துக் கொண்டிருந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக அவர் ‘சர்தார்’ படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி தான் நடித்த மூன்று திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் படம் ‘சர்தார்-2’.

கார்த்தியின் திரை உலகப் பயணத்தில் ‘சர்தார்’ ஒரு மிகப்பெரிய வெற்றிப் பெற்றப் படம் என்ற நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்