பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைக்கவில்லை எனவும், அதற்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இயக்குனர் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கி வரும் படத்தில் நடித்து வரும் கார்த்தி, இந்தப் படங்களை நிறைவு செய்த பிறகு சர்தார்-2 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
– தேஜேஷ்