Take a fresh look at your lifestyle.

பையா – எனக்கு அடையாளம் கொடுத்த படம்!

நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி

‘பையா’ திரைப்படம் நாளை (11.04.2024) மீண்டும் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படுவதை ஒட்டி அப்பட நாயகன் கார்த்தியுடன் ஒரு சந்திப்பு.

‘பையா’ படப்பிடிப்பில் இருந்த நாட்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம் நண்பர் இயக்குனர் என். லிங்குசாமியும் வசனம் எழுதிய நானும்.

‘பருத்தி வீரனுக்குப்’ பிறகு ‘பையா’ தனக்கு மீண்டும் ஒரு புதிய அறிமுகம் போல் அமைந்ததாக குறிப்பிட்டார் கார்த்தி.

“எந்தக் காட்சியில் இருந்து பார்த்தாலும் மீண்டும் முழுமையாகப் பார்த்து முடிக்கும் அனுபவத்தை தருவதாக ‘பையா’ அமைந்திருக்கும்” என்று நண்பர்கள் கூறுவதை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மீண்டும் மீண்டும் பார்க்கும் பரவசத்தை ‘பையா’ தருவதை எத்தனையோ பேர் எங்களிடமும் கூறியதுண்டு.

நான் டீ சர்ட் அணிந்திருப்பதைப் பார்த்து, “இவர்தான் பையா மாதிரி இருக்கிறார்,” என்று இயக்குனர் லிங்குசாமியிடம் கிண்டலாகக் குறிப்பிட, “இல்லாவிட்டால் நீங்கள் ஐயா என்று அழைத்துவிட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் டீ சர்ட்,” என்று நான் கூற கலகலப்பானது அந்த மாலை.

“படப்பிடிப்பு நாட்களில் நான்தான் அவருக்குப் பேச்சுத் துணை” என்றார் உடன் வந்த உதவி இயக்குநர் பிரபுவிடம். உண்மையில் தமன்னாவுடன் காருக்குள் அவர் பேசிய வசனங்கள்தான் படத்துக்குத் துணையாக அமைந்தன.
*
பிருந்தா சாரதி