புகழின் உச்சிக்குச் சென்றபோதும், நடிகர் திலகம் தன் குடும்பத்துடன் கொண்டிருந்த பாசம் அலாதியானது. கூட்டுக் குடும்பத்திற்கு ஒரு நடைமுறை உதாரணத்தைப் போலவே திகழ்ந்தது அவருடைய “அன்னை இல்லம்”.
“நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” என்பதை உணர்த்தும் நடிகர் திலகத்தின் குடும்பம் சூழ்ந்த இனியதொரு தருணம்.