Take a fresh look at your lifestyle.

நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடி!

2003 ஆம் ஆண்டு மலையாளப் படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார், நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு, தமிழில் ‘ஐயா’ படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்துக் கோடம்பாக்கத்தில் கால் பதித்தார்.

ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆனார்.

கொஞ்ச நாட்கள் காதல் வலையில் சிக்கி இருந்தாலும், அதில் இருந்து மீண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனைக் கரம் பிடித்தார்.

திருமணம் ஆனாலும் அவரது மார்க்கெட் குறையவில்லை.

அண்மையில் நயன்தாரா, சிரஞ்சீவி ஜோடியாக நடித்த தெலுங்கு படம் ஓரளவு வசூல் குவித்தது. இப்போது பாலகிருஷ்ணாவின் 111-வது படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அவரது நிதி ஆதாரங்கள் குறித்து ஒரு ஆங்கில தினசரி வெளியிட்டுள்ள செய்தி இது:

நயன்தாரா விளம்பரப் படங்களில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு இரண்டு நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் போதும். படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் கேட்கிறார்.

நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடி. இதில் ரூ. 50 கோடி மதிப்புள்ள ஜெட் விமானமும் அடங்கும்.

– பாப்பாங்குளம் பாரதி.